கன்னியாகுமரி மாவட்டம் களியங்காடு பகுதியில் உள்ள பாலசுப்ரமணியன் என்பவர் வன உயிரின பாதுகாப்புச்சட்ட பட்டியல் ஒன்றில் உள்ள வன உயிரினமான மலைப்பாம்பை கொன்று எண்ணெய் காய்ச்சி எடுப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவரின் வீட்டினை வேளிமலை வனச்சரக அலுவலர் ,வேளிமலை வடக்குபிரிவு வனவர் மற்றும் வேளிமலை தெற்கு வனக்காப்பாளர் மற்றும் வேட்டைத்தடுப்புக்காவலர் அடங்கிய குழுவினர் சோதனை செய்து மாலைப்பாம்பு எண்ணெயை கைப்பற்றினர் .பின்னர் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜாவின் உத்தரவின் பேரில் பாலசுப்ரமணியன் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.