மழை அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அடங்கிய குழுவினர் வெள்ள மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் வைத்து மேற்படி குழுவினரையும் உபகரணங்களையும் ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின் போது தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
வெள்ள மீட்பு பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய எண் 100 அல்லது 7010363173 எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *