மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம் திருப்பதிச்சாரம்
ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலணி, சுசீந்திரம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட
கடைக்கிராமம், நங்கை நகர் மற்றும் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், நேரில்
பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை
சீற்றத்தினால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதோடு.
விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை
மீட்புப்படையினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மூலம் மீட்டு 9 தங்கும் முகாம்களில்
பாதுகாக்கப்பட்டனர். ஒவ்வொரு முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ
வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவுகள் வழங்கப்பட்டது. தற்போது மழை
இல்லாததினால் 9 முகாம்களில் தங்கியிருந்த 239 குடும்பங்களைச் சார்ந்த 756 நபர்கள்
தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டார்கள்.


மேலும் தோவாளை ஊராட்சி ஒன்றியம் திருப்பதிச்சாரம் ஊராட்சிக்கு உட்பட்ட
நெசவாளர் காலணியில் மழைவெள்ளம் தேங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு.
அங்கு கிருமிநாசினி பொடி போடும் பணியினை பார்வையிட்டதோடு, அங்குள்ள வீடுகளில்
குழாயிகளில் வரும் குடிநீரின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும்
அப்பகுதியில் நடமாடும் மருத்துவ குழுவின் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை
மேற்கொள்வதையும் பார்வையிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி – சுசீந்திரம்
தேர்வுநிலை பேரூராட்சி கூட்டுகுடிநீர் திட்டம் தேரூர் நீரேற்ற நிலையத்தினை
பார்வையிடப்பட்டதோடு, அங்கு குடிநீரினை சுத்தம் செய்யும் குளோரின் அறையினை
பார்வையிட்டு. குடிநீரில் கலக்கும் குளோரினின் அளவு குறித்து ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மழை மற்றும் வெள்ள காலங்களில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற
தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்குதல், குடிதண்ணீர்
விநியோகிக்கப்படும்போது, குடிதண்ணீரில் தகுந்த அளவு குளோரின் கலந்திருக்கிறதா
என்பதை உறுதி செய்யப்பட்ட பின்பே குடிதண்ணீர் விநியோகிக்கப்படவேண்டும். குளோரின்
அளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2 பிபிஎம் இருக்கவேண்டும். தெருக்குழாய்களில்
குறைந்தது 0.5 பிபிஎம் இருக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பணியில்
ஈடுப்பட்டுள்ளோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மழை வெள்ள காலங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலோ, தரைமட்ட குடிநீர்
தொட்டிகளிலோ அல்லது குடிநீர் குழாய்களிலோ மழை வெள்ளம் புகுந்திருந்தால்,
குடி தண்ணீர் தொட்டிகள் பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். பிளீச்சிங்
பவுடர் தேவையான அளவு கலக்கவேண்டும். உடைந்த குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்ட
வேண்டும். குடிநீர் திறந்தவுடன் முதல் 5 நிமிடங்களில் தெருக்குழாய் வழியாகவோ,
வீட்டுக்குழாய் வழியாக வரும் குடிநீர் குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடாது என
கேட்டுக்கொள்ப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து சுசீந்தரம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடைக்கிராமம்
பகுதியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலன் அரசு பள்ளி மாணவர் விடுதியினை
பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு. விடுதி வளாகத்தில் பிளிச்சிங் பவுடர் தூவிடவும், குடிநீர்
குழாய்களில் வரும் குடிநீரில் மாசு ஏற்படமால் இருக்கவும், அங்கு தேங்கியுள்ள மழைநீரினை
அப்புறப்படுத்தியதை உறுதி செய்திட வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது.
மழைவெள்ளம் புகுந்த ஊர்களில் உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட
வேண்டும். நீரினால் பரவும் வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் ஏற்படுகின்றதா
என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாம்புகடி, நாய்க்கடி மருந்துகள் உட்பட
அனைத்து வகையான மருந்துகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என துறை சார்ந்த
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நங்கை நகரில் 1 லட்சம் லிட்டர்
கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பார்வையிட்டதோடு.
தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் குழாய்கள் மற்றும்
குடிநீரினையும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்பகுதிகளையும் சுத்தம்,
சுகாதாரமாக பேணிட வேண்டும். நெகிழி குப்பைகளை வடிகால் ஓடைகள், பொது இடங்களில்
அலட்சியமாக போடுவதை தவிர்ப்பதோடு, தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள்,
உணவகங்கள் உள்ளிட்டவர்கள் மட்கும் குப்பை, மட்கா குப்பை என பிரித்து தங்கள்
பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும்
அரசு தடை செய்யப்பட்டுள்ள நெகிழிகளை பயன்படுத்தாமல் மஞ்சபை, துணிபைகள்,
காகிதப்பைகள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யும் பைகளை உபயோகப்படுத்துவதின் மூலம் நம்
வருங்கால சந்ததிகளையும், நமது மாவட்டத்தையும் பருவமாற்ற பேரிடர்களிலிருந்து
தற்காத்து கொள்ளலாம். எனவே அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து
முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிடமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
முன்னதாக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில்
குளோரின் அளவு நீர்தேக்க தொட்டியில் கலப்பது, மழை வெள்ள நேரங்களில் மேற்கொள்ள
வேண்டிய சுகாதாரப்பணிகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு
வழங்கப்பட்டது.
நடைபெற்ற ஆய்வுகளில் துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) மீனாட்சி, உதவி
இயக்குநர்கள் விஜய லெட்சுமி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்),
தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதா ராணி, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *