மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் அக்டோபர் மாதம் 28 ம் தேதி மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமை வகித்து தலைமை உரையாற்றுகிறார். மாடத்தட்டுவிளை கியூரியா மேரி சகாய லிண்டா குழுவினர் இறை வணக்கமும், அப்பட்டுவிளை பிரசீடியம் ஜோஸ்பின் சுமிதா இறை வார்த்தையும், பருத்தியறைத்தோட்டம் பிரசீடியம் தமிழரசி இறை வேண்டலும் செய்கின்றனர். முளகுமூடு கொமித்சிய தலைவர் எட்வர்ட் சிங் வரவேற்கிறார். கொமித்சிய துணைத் தலைவர் பிறகாசி ஒளியேற்றல் தொகுத்து வழங்குகிறார். முளகுமூடு கொமித்சிய ஆன்ம இயக்குநர் அருட்பணி சகாயதாசு அறிமுக உரையாற்றுகிறார். கோட்டாறு ரீஜியோ ஆன்ம இயக்குநர் அருட்பணி பஸ்காலிஸ் வாழ்த்துரை வழங்குகிறார். கொமித்சிய துணைச் செயலாளர் டெய்சி நன்றி கூறுகிறார். 10 மணிக்கு நடக்கும் கருத்தமர்வில் குழிவிளை பிரசீடிய பிரான்சிசு, அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் ஆகியோர் உரையாற்றுகின்றனர். மதியம் 12.30 மணிக்கு கேள்வி அரங்கம் நடக்கிறது. 2 மணிக்கு மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கும் செபமாலை பவனியை மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் துவக்க உரையாற்றி துவக்கி வைக்கிறார். செபமாலை பவனியானது வலயகண்டரை குருசடியில் இருந்து துவங்கி பண்டாரக்காடு குருசடி சென்று அங்கிருந்து வில்லுக்குறி மெயின் ரோட்டில் உள்ள குருசடி சென்று அதன்பிறகு அந்திச்சந்தை குருசடி வந்து பின்னர் மாடத்தட்டுவிளை குருசடி வந்து பின்னர் புனித செபஸ்தியார் ஆலயம் வந்தடையும். இந்த செபமாலை பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொள்ளுகின்றனர்.மாலை 3.30 மணிக்கு மறையுரை, நிறையுரை, நற்கருணை ஆசீர் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் நடக்கிறது. 4.30 மணிக்கு மாநாட்டு மலரை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் வெளியிட மணலி கியூரியா தலைவர் பிடிஎஸ் மணி பெற்றுக் கொள்கிறார். மாடத்தட்டுவிளை கியூரியா தலைவர் ஜார்ஜ் நன்றி கூறுகிறார்.