மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் திருக்குடும்ப திருஇயக்கம் நடத்திய கைத்தொழில் பயிற்சி முகாம் புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நடந்தது. இந்த முகாமை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருக் குடும்ப திருஇயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கைத்தொழில் பயிற்சி முகாமில் கோல்டு கவரிங் நகைகளை உருவாக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மாடத்தட்டுவிளையில் கைத்தொழில் பயிற்சி முகாம்
