மரியாயின் சேனை முளகுமூடு கொமித்சியம் சார்பில் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மரியன்னை மாநாடு நடந்தது. காலையில் துவங்கிய நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மாடத்தட்டுவிளை கியூரியா மேரி சகாய லிண்டா குழுவினர் இறை வணக்கமும், அப்பட்டுவிளை பிரசீடியம் ஜோஸ்பின் சுமிதா இறை வார்த்தையும், பருத்தியறைத்தோட்டம் பிரசீடியம் தமிழரசி இறை வேண்டலும் செய்தனர். முளகுமூடு கொமித்சிய தலைவர் எட்வர்ட் சிங் வரவேற்றார். கொமித்சிய துணைத் தலைவர் பிறகாசி ஒளியேற்றல் தொகுத்து வழங்கினார். முளகுமூடு கொமித்சிய ஆன்ம இயக்குநர் அருட்பணி சகாயதாசு அறிமுக உரையாற்றினார். மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியாவின் ஆன்ம இயக்குநர் அருட்பணி ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். கொமித்சிய துணைச் செயலாளர் டெய்சி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் மேரி ஸ்டெல்லா ராணி, இணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த கருத்தமர்வில் குழிவிளை பிரசீடிய பிரான்சிசு, அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் ஆகியோர் உரையாற்றினர். மதியம் கேள்வி அரங்கம் நடந்தது. 2 மணிக்கு மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கும் செபமாலை பவனியை மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் முளகுமூடு கொமித்சியம் ஆன்ம இயக்குநர் அருட்பணி சகாயதாஸ் முன்னிலையில் . செபமாலை பவனியானது துவங்கி பண்டாரக்காடு குருசடி சென்று அங்கிருந்து வில்லுக்குறி மெயின் ரோட்டில் உள்ள குருசடி சென்று அதன்பிறகு அந்திச்சந்தை குருசடி வந்து பின்னர் கான்வென்ட் சாலை வழியாக மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வந்தடைந்தது. இந்த செபமாலை பவனியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.மாலையில் மறையுரை, நிறையுரை, நற்கருணை ஆசீர் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து மாநாட்டு மலரை மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியிகளில் கியூரியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
/