மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் கபடி போட்டி நடந்தது. மாடத்தட்டுவிளை ஆலய வளாகத்தில் நடந்த கபடி போட்டியை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இணை பங்குத்தந்தை ஜாண் பாப்ட்டிஸ்ட், பங்கு பேரவை துணைத் தலைவர் சகாய பால்ததேயுஸ், செயலாளர் மேரி ஸ்டெல்லாபாய், துணை செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியில் 20 வயதிற்கு உட்பட்ட 70 கிலோவிற்கு மேற்படாத வீரர்கள் கலந்து கொண்டனர். 34 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தெற்குறிச்சி அணி முதலிடம் பிடித்தது. இந்த அணிக்கு வெற்றிக்கோப்பையும், ரொக்கப்பணம் ரூ. 6001ம் பரிசாக வழங்கப்பட்டது. 2 ஆம் இடம் பிடித்த இலந்தையடிதட்டு அணிக்கு வெற்றிக்கோப்பையும், ரூ. 5001 ரொக்கப்பணமும். 3 ஆம் இடம் பிடித்த சடையமங்கலம் அணிக்கு வெற்றிக் கோப்பையும், ரூ. 4001 ரொக்கப்பணமும். 4 ஆம் இடம் பிடித்த திருநயினார்குறிச்சி அணிக்கு வெற்றிக்கோப்பையும், ரூ. 3001 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி கபடி கழக நிர்வாகிகள் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.
இளைஞர் இயக்க நிர்வாகிகள் தலைவர் ஜெபஸ்டஸ் லிபின், துணைத் தலைவர் அஜின், செயலாளர் அருண் ஜெனிக்ஸ், துணை செயலாளர் அருள் ஜார்ஜ்பெல், பொருளாளர் ராகுல் மற்றும் இளம் கிறிஸ்துவ மாணாக்கர் இயக்கம், இளம் பெண்கள் இயக்கம், முன்னாள் வழிகாட்டிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாடத்தட்டுவிளையில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
