கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய 8 ம் திருவிழாவை முன்னிட்டு நடந்த சமபந்தி விருந்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 20000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த சமபந்தி விருந்துக்காக 108 ஆட்டு கிடா கறிகள் சமைக்கப்பட்டது.
பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் இணைபங்குத்தந்தை பிரவின் தாஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், இணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையின் ஒத்துழைப்போடு கத்தோலிக்க சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சமபந்திக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலையில் சமபந்தியை பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் செபம் செய்து அர்ச்சித்து துவக்கி வைத்தார். இந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர் கூறுகையில் 108 ஆட்டு கிடா கறியோடு நடக்கும் சமபந்தி என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுதான் எங்கள் நினைவுபடி முதல் என்று தெரிவித்தனர்.