போதை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கண் தானம், உடல் தானம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி மாடத்தட்டுவிளை அந்தோணி திருமண மண்டபத்தில் 28 ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் பச்சைமால் கலந்து கொள்கின்றனர். 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் மாரத்தான் போட்டியானது சூசைமிக்கேல் அடிகளார் சாலை வழியாக மணக்கரை, பண்டாரவிளை, கண்டன்விளை ரயில்வே கிராசிங், கண்டன்விளை இறக்கம் ஜங்ஷன், குசவன்குழி, மொட்டவிளை, பேயன்குழி, நுள்ளிவிளை, பரசேரி ஜங்ஷன், கொன்னக்குழிவிளை, கரிஞ்சான்கோடு, வில்லுக்குறி பாலம் வந்து அங்கிருந்து வில்லுக்குறி குருசடி ஜங்ஷன், கான்வென்ட் சாலை வழியாக மாடத்தட்டுவிளை அந்தோணி திருமண மண்டபம் வரை 15 கி.மீட்டர் தூரம் நடக்கிறது. இதில் முதல் பரிசு ரூ.10001, 2 ம் பரிசு ரூ. 7001, 3 ம் பரிசு ரூ.5001, 4 ம் பரிசாக 10 பேருக்கு தலா ரூ. 1001, 5 ம் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.501 வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி சார்ட் இலவசமாக வழங்கப்படும். வேணாடு அறக்கட்டளை சார்பில் நடக்கும் மாரத்தான் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான அன்பளிப்பை அதிமுக குமரி கிழக்கு மாவட்டம் வழங்கி உள்ளது. இவ்வாறு அதிமுக குமரி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் ஆன்றோ லீடன்ஸ் பேட்டி அளித்தார். பேட்டியின் போது வேணாடு அறக்கட்டளை செயலாளர் ஆஸ்லின் சூசை மிக்கேல், வேணாடு அறக்கட்டளை ஜவின், ஜெய பாரதி, தமாக குமரி (ம) மாவட்ட இளைஞரணி தலைவர் அபிலாஷ் உட்பட பலர் இருந்தனர்.
மாடத்தட்டுவிளையில் 28 ம் தேதி மாரத்தான் போட்டி
