மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

Share others

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா ஏப்ரல் மாதம் 10 ம் தேதி காலை 9 மணிக்கு தொடக்க விழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார்
ஆலய வளாகத்தில் இருந்து புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளிக்கு பவனியாக வருகின்றனர்.

நிகழ்ச்சிக்கு குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை வகிக்கிறார். சென்னை புனித அன்னாள் சபை தலைமை அன்னை அருட்சகோதரி கிளாரா வசந்தி முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக

முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருள்பணி டேவிட் மைக்கிள், மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ்,

தஞ்சை மாநிலத் தலைவி அருட்சகோதரி அக்ஸிலியா ஜெயந்தி, அருட்சகோதரி லில்லி புஷ்பம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து கொடியேற்றமும், 10 மணிக்கு திருப்பலி புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி கலையரங்கத்தில் நடக்கிறது .
11.30 மணிக்கு விருந்தினர்களை கவுரவிப்பும் அதை தொடர்ந்து கவிஞர் எஸ்எம் செபாஸ்டின் எழுதிய குறள் நூறு புத்தகத்தை குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் வெளியிட சென்னை புனித அன்னாள் சபை தலைமை அன்னை அருட்சகோதரி கிளாரா வசந்தி பெற்றுக் கொள்கிறார். தொடர்ந்து நூற்றாண்டு விழா நினைவு வெளியீடாக மரம் நடு விழா, மலர் வெளியீடு, இந்நாள் மாணவர்களின் நினைவு பதிவு புத்தகம் வெளியீடு, முதல் தலைமை ஆசிரியர் மரியகண் குடும்பத்தினர் கல்வி உதவித்தொகை அன்பளிப்பு அளித்தல் ஆகியவை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு உணவு விருந்து, மாலை 4.30 மணிக்கு முக்கிய விருந்தினர்கள் கல்வியாளர்கள் வரவேற்பு நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு குளச்சல் வட்டார கல்வி அலுவலர் ஹரி குமார் தலைமை வகிக்கிறார்.
மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன், குருந்தன்கோடு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜாண்சன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தொடர்ந்து இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, ஒளியேற்றல், அறிக்கை சமர்ப்பித்தல் நடக்கிறது. மாடத்தட்டுவிளை இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ், குருந்தன்கோடு வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் லதா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுவாமி தாஸ், முன்னாள் மாணவர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் எட்வர்டு, பெற்றோர் ஆசிரிய சங்க தலைவி ஜார்லின் ஜெயின்சி, மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை இணை செயலாளர் ஜோஸ்வால்ட்டின், ஓய்வு பெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் எட்வர்டு அமல்ராஜ், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி தங்கமரியான், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் முனைவர் பீட்டர் அமலதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தொடர்ந்து நூற்றாண்டு விழா சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், நன்றியுரையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தாளாளர், தலைமை ஆசிரியை, இல்லத்தலைவி, அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், விழா குழுவினர் இணைந்து செய்து உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *