மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

Share others

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் தொடக்க நாளான 16 ஆம் தேதி காலை 6 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி நினைவில் வாழும் அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவாக திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்டம் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் முன்னிலையில் திருக்கொடியேற்றம், மறையுரை, கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஜாண்ரூபஸ் தலைமையில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 3 ஆம் நாள் விழாவான 18ம் தேதி காலை 6 மணிக்கு புலியூர்குறிச்சி அதிபர் அருட்பணி இயேசு ரெத்தினம் தலைமையில், பொன்மலை தியான மையம் இயக்குனர் அருட்பணி மரிய வின்சென்ட் மறையுரையில் திருமுழுக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு திரித்துவபுரம் மறை வட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி ஒய்சிலின் சேவியர் தலைமையில் நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 7 ஆம் நாள் விழாவில் 22ம் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், 8 ஆம் நாள் விழாவான 23ம் தேதி காலை 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனித நேய கூட்டமைப்பு பொதுக்கூட்டம், காலை 11 மணிக்கு பகிர்வின் சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்டம் மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

9 ஆம் நாள் விழாவான 24ம் தேதி காலை 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட செயலாளர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை கண்டன்விளை பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ தலைமையில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்புதவில், வானவேடிக்கையும் நடக்கிறது, 10 ஆம் நாள் திருவிழாவான 25ம் தேதி காலை 6.30 மணிக்கு முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி டேவிட் மைக்கேல் தலைமையில், வெட்டுவெந்நி திருத்தலம் அதிபர் அருட்பணி சகாயதாஸ் மறையுரையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியும், காலை 8.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில், ஆரல்வாய்மொழி மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி ராஜமணி மறையுரையில் ஆடம்பர பெருவிழா திருப்பலி நடக்கிறது, மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில், இரவு 8.30 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல், திருவிழா நன்கொடையாளர்கள் மற்றும் சிறப்பு குழுக்களின் பொறுப்பாளர்களை கவுரவித்தல் நிகழ்வும், தொடர்ந்து கலைநிகழ்ச்சி ஆகியவையும் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ், அருள் சகோதரிகள் மற்றும் பங்கு மேய்ப்புப்பணிபேரவை துணைத் தலைவர் சகாய பால்ததேயு, செயலாளர் மேரி ஸ்டெல்லாபாய், துணைச் செயலாளர் ஜோஸ்வாால்டின், பொருளாளர் சார்லஸ், பங்கு இறைமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *