கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை சார்ந்து சுமார் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். இந்த ஆலயத்திற்கு வர வேண்டும் என்றால் அரசு பஸ் வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என்று இருந்து வந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மாடத்தட்டுவிளை பங்கு நிர்வாகம் சார்பிலும் மனுக்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாடத்தட்டுவிளை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் தலைமை வகித்து ஜெபம் செய்து அர்ச்சித்து வைத்தார். மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் பால் ததேயுஸ், செயலர் மேரி ஸ்டெல்லாபாய், பொருளாளர் சார்லஸ், திங்கள்நகர் கிளை மேலாளர் ரதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் பஸ் வசதியை துவக்கி வைத்தார்.பங்கு அருட்பணி பேரவை துணை செயலாளர் ஜோஸ் வால்டின் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கேடி உதயம், ஒன்றிய தலைவர் பால்துரை, நுள்ளிவிளை ஊராட்சி கிழக்கு கமிட்டி தலைவர் ஜோசப்ராஜ், கட்டிமாங்கோடு ஊராட்சி கமிட்டி தலைவர் பெலிக்ஸ் ராஜன், வில்லுக்குறி பேரூராட்சி கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ், முன்னாள் மாடத்தட்டுவிளை பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர்கள் ஜோசப் ராஜ், அகஸ்டின், எட்வின் சேவியர் செல்வன், அன்பிய ஒருங்கிணைய பொருளாளர் மைக்கிள் ஜார்ஜ், செயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் விஜிலா, புனித செபஸ்தியார் கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை துணைத் தலைவர் ஜாண் கென்னடி, செயலாளர் விக்டர் தாஸ், முன்னாள் தக்கலை பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் சூசை மரியான், வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு செயலாளர் குமரேசன், ஓய்வு பெற்ற வன அதிகாரி தங்கமரியான், மங்கள அல்போன்ஸ், ஜெயராஜ், ஜாண்ரோஸ், பிரான்சீஸ் சேவியர், ரெக்ஸ்சிலின், ஜெபா,செல்வநாதன், ராபின்சன், டோமினிக் , சதீஷ் மற்றும் பங்கு அருட்பணி பேரவை உறுப்பினர்கள், அன்பிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த 11ஏ அரசு பஸ்சானது நாகர்கோவிலில் இருந்து ஆசாரிபள்ளம் வழியாக வில்லுக்குறி பாலம், குதிரைபந்திவிளை, மாடத்தட்டுவிளை ஆலயம் வந்து சூசைமிக்கேல் அடிகளார் சாலை வழியாக அன்னை ஞானம்மா கல்வியியல் கல்லூரி சென்று வில்லுக்குறி குருசடி வழியாக தக்கலைக்கு இயக்க பட உள்ளது. மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்கத்தால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வழியாக அரசு பஸ் இயக்கம்
