கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலையில் திருப்பலி சகாய நகர் பங்குத்தந்தை அருட்பணி ஹால்வின் தலைமையில் நடந்தது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலையை தொடர்ந்து திருக்கொடியேற்றமும், திருப்பலியும் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்தது. இதில் மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் உட்பட பல அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இரவில் சூப்பர் சிங்கர் மெல்லிசை நிகழ்ச்சி, விடை தேடும் விவிலிய வினா, மாபெரும் சூப்பர் விவிலிய வினாடி வினா நடந்தது. விழா நாட்களில் காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் இரவு 8.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருப்பலி மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் வேங்கோடு வட்டார முதல்வர் பேரருட்பணி மனோகியம் சேவியர் மறையுரையுடன் நடக்கிறது.6 ம் நாள் விழாவான 11 ம் தேதி காலை 8.30 மணிக்கு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் குழித்துறை மறைமாவட்ட நிதி பரிபாலகர் பேரருட்பணி ஜெயக்குமார் அருளுரையோடு நடக்கிறது. 10.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் 6.30 மணிக்கு திருப்பலி காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில் புத்தன்கடை வட்டார முதல்வர் பேரருட்பணி மரிய மார்டின் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி மன்றம் வழங்கும் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் திருப்பலி மறைமாவட்ட முதன்மை செயலர் பேரருட்திரு அந்தோணி முத்து தலைமையில் மறைமாவட்ட திருமண நீதித்துறை பேரருட்பணி ஆரோக்கிய ஜோஸ் மறையுரையோடு நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருப்பலி பங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ் தலைமையில் நடக்கிறது. 10 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருமுழுக்கு, 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், 6.30 மணிக்கு திருப்பலி கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி ஜாண் ரூபஸ் தலைமையில் தென்தாமரைகுளம் பங்குத்தந்தை அருட்பணி சுரேஷ் மறையுரையோடு நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 14 ம் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலி, 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி துண்டத்துவிளை பங்குத்தந்தை அருட்பணி எக்கர்மென்ஸ் தலைமையில் வார்த்தை வழிபாடு பணிக்குழு செயலாளர் அருட்பணி பெனிட்டோ மறையுரையோடு நடக்கிறது. மாலை 5:45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6:30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை புலியூர்குறிச்சி திருத்தல அதிபர் அருட்பணி இயேசு ரெத்தினம் தலைமையில் முளகுமூடு வட்ட முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கிள் அருளுரையோடு நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 10 ம் திருவிழாவான 15 ம் தேதி காலை 5 மணிக்கு திருப்பலூ இணை பங்குத்தந்தை அருட்பணி அனிஷ் தலைமையிலும், 6 மணிக்கு திருப்பலி மண்ணின் மைந்தர் அருட்பணி மரிய டேவிட் தலைமையிலும், 7 மணிக்கு மலையாள திருப்பலி நெய்யாற்றின்கரை மறை மாவட்டம் நெல்லிமூடு அருட்பணி பினு தலைமையிலும் நடக்கிறது. 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தின விழா, ஆடம்பர கூட்டுத் திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. 11 மணிக்கு தேர்பவனியும் மாலை 7.30 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர், வானவேடிக்கை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை, பங்கு அருட்சகோதரிகள், பங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ், இணை பங்குத்தந்தை அருட்பணி அனிஷ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜேக்கப் ததேயுஸ், செயலாளர் மைக்கோலாஸ் .ஜோனாப் ஆர்க் ஜோஸ், துணை செயலாளர் கிறிஸ்து தாஸ், பொருளாளர் சாட்டோ ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.