கன்னியாகுமரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்
மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம்
கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி
வகுப்பினை மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், துவக்கி வைத்து பேசுகையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு
திட்டங்களை உருவாக்கி மிகசிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் தமிழ்நாடு அரசின் ஒரு முக்கிய திட்டம் ஆகும்.
இந்த திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்
நோக்கமானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின்
திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாகும். இதன் முக்கிய கூறுகளாக
உள்ளடங்கள், அணுகல் மற்றும் வாய்ப்புகள் மாற்றுத்திறனாளிகளை மூன்று கூறுகள்
வாரியாக மேம்படுத்துதல் அடிப்படையில் உரிமைகள் திட்டம் திட்டமிட்டு உள்ளது.
கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் சேவைகள் வழங்க மாற்றுத்திறனாளிகள்
நலத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. பல்வேறு கட்டங்களாக அனைத்து
மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் திட்ட கால அளவு ஆறு வருடங்கள். முதற்கட்டமாக
திருச்சி, தர்மபுரி, கடலூர், தென்காசி, சென்னையில் மூன்று மண்டலங்கள் (ராயப்புரம்,
திரு.வி.க நகர் மற்றும் சோழிங்கநல்லூர்) 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2023-யில் இரண்டாம் கட்டமாக 10 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் திறனை மேம்படுத்தி ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்பு கட்டமைப்பை
நிறுவுதல், கடைக்கோடியில் வசிப்பவர்களுக்கும் சமூக பராமரிப்பு சேவைகள் பயன்கள்
அளிப்பதை மேம்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளின் தற்சார்பு திறன்களை மேம்படுத்த
முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்துதல், மாற்றுத்திறன் பயனாளிகளுக்கான சமூகத்
தரவுகளை உருவாக்குதல், மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பின் அளவினை ஆய்வு செய்து
மாற்றுத்திறன் வகையை கண்டறிந்து தீர்மானிப்பதையும், சான்றிதழ் அளிக்கும்
முறையையும் வலுப்படுத்துவது. தற்போதுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கொள்கைகளை
ஆராய்ந்து ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்குதல், மற்ற துறைகளுடனான
ஒருங்கிணைப்பு பல்துறைகளோடு இணைந்து செயல்படுவதற்கான வழிகாட்டு அமைப்பு
ஆகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பகுதி வாரியாக மற்றும் வட்டார அளவிலான
ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்கி ஒருங்கிணைந்த ஆரம்ப நிலையை
கண்டறிந்து சரி செய்யவும், ஒருங்கிணந்த சேவைகள் மையத்தில் உள்ள குழுவினர்
விவரங்கள், மைய மேலாளர், மாற்றுத்திறனாளிகள் நலப் பணியாளர்,
ஆற்றுப்படுத்துனர்/மருத்துவ உதவியாளர், தொழில் சார் சிகிச்சையாளர், முட நீக்கியல்
நிபுணர், பேச்சு மற்றும் மொழியியல் நிபுணர், சிறப்பு ஆசிரியர் ( அறிவுசார் குறைபாடு),
தொழில்நுட்ப பணியாளர், அளநிலை உதவியாளர், நிர்வாக மற்றும் கணக்காளர் உதவியாளர்,
வாகன ஓட்டுனர் ஆகியோர் வாயிலாக களசேவை மேற்கொள்ளப்பட்டு விடுப்பட்ட
மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள் திட்டமிடல், சமூக
பாதுகாப்பு சேவைகள் பெற ஆலோசனை, வாழ்கை திறன் கல்வி விழிப்புணர்வு மற்றும்
பொதுக் கல்வி, ஆற்றுப்படுத்துதல், இ சேவை மையம், தொலைபேசி வழி மறுவாழ்வு
சேவைகள், பரிந்துரை சேவைகள், கண்காணிப்பு மற்றும் பதிவேடு பராமரிப்பு. மேலும்
உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க, வேலை வாய்ப்பை
உறுதிப்படுத்த அனுபவமிக்க நிறுவனங்களை ஈடுபடுத்துதல், வாழ்வாதாரம் சிறு தொழில்
வளர்ச்சிக்காக நிதி கொடை அளிப்பது, திறன் பயிற்சி வேலைவாய்ப்புகள், தொழில்
முனைவோர் வளர்ச்சி திட்டங்களை பெற சம வாய்ப்பு வழங்குதல், உயர்கல்வி மேல்நிலைக்
கல்வி வரை பயில மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல். அனைவருக்கும் வீடு திட்டத்தின்
கீழ் விண்ணப்பித்தவர்களுக்கும் இதில் பயன்பெறுவார்கள். நடைப்பெற உள்ள
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியில் மகளிர் திட்டத்தின் சார்பாக செயல்படும்
அந்தந்த பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.
வீடுகள்தோறும் கணக்கெடுப்பு எடுக்க வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் வாயிலாக விடுப்பட்ட அனைத்து
மாற்றுத்திறனாளிகளுக்கம் தமிழ்நாடு அரசின் திட்டங்களை கிடைத்திட வழிவகை
செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
சிவசங்கரன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபி ஜாண், களப்பணியாளர்கள்
பலர் கலந்து கொண்டார்கள்.