கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர், தலைமையில், மாற்றுத்
திறனாளிகள் குறைகள் மற்றும் இன்னல்களை அவ்வப்போது கேட்டு அறிந்து
களைந்திட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில், 20 பயனாளிகளுக்கு ரூ.2.71 லட்சம் மதிப்பில் திறன்பேசிகளும், 5
பயனாளிகளுக்கு
ரூ.1.77 லட்சம் மதிப்பில் பிரைய்லி ரீடர்களும்,
26 பயனாளிகளுக்கு 4.56 லட்சம் மதிப்பில் சக்கர நாற்காலிகளும் என மொத்தம்
51 பயனாளிகளுக்கு ரூ.9.04 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்
பாலசுப்பிரமணியம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.