மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மிட்ஸ் சமூகப்பணி மையத்தில் 513 சுய
உதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த சுய உதவி குழுக்களுக்கான வருடாந்திர
கூடுகை மற்றும் கிறிஸ்மஸ் விழாவானது
மிட்ஸ் கலை
அரங்கில் வைத்து நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் நடந்த இந்த விழாவில் விளவங்கோடு சட்டமன்ற
உறுப்பினர் தாரகை கத்பர்ட், கன்னியாகுமரி மாவட்ட குற்ற வழக்குத் தொடர் துறை உதவி
இயக்குநர் ஜெப ஜீவா, மறைமாவட்ட முதன்மை குரு மோண்.ஜோஸ் பிறைட், பெடரல் வங்கியின்
திருவனந்தபுரம் மண்டல துணை தலைவர் ரேஷ்மி ஓமனகுட்டன் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த விருந்தினர்கைைள மிட்ஸ் இயக்குநர்
அருட்தந்தை முனைவர் ஜெறோம் வரவேற்றார். மிட்ஸ் திட்ட அலுவலர்
ஷாஜன் ஜோசப் மிட்ஸில் செயல்படும் திட்டங்கள், அவற்றால் மக்கள் பெற்று வரும்
நன்மைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, பேசிய கன்னியாகுமரி மாவட்ட குற்ற வழக்கு தொடர்
துறை உதவி இயக்குநர் ஜெப ஜீவா பெண்கள் தங்களது மதிப்பு மிக்க நேரத்தை
தொழில் செய்வதில் செலவிட்டு முன்னேற வேண்டும் என்றும், சமூக அக்கறையோடும்,
விழிப்புணர்வோடும், உண்மையாகவும், நேர்த்தியாகவும் செயல்பட வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
பின்னர் பேசிய விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட்
பெண்களின் மகத்துவம் மற்றும் சங்ககாலம் முதல் இன்றைய காலம் வரை பெண்கள் செய்து
வரும் தியாகங்கள் குறித்து பல கருத்துகளை கூறி பெண்கள் மேலும் சமூகத்தில் உயர வேண்டும் என்று
வாழ்த்தினார். மேலும் மறைமாவட்ட முதன்மை குரு மோண்.ஜோஸ் பிறைட் ,
ரேஷ்மி ஓமனகுட்டன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர் மறைமாவட்ட ஆயர் மேதகு
வின்சென்ட் மார் பவுலோஸ் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கிறிஸ்மஸ் தின
செய்தி அளித்து அனைவரையும் வாழ்த்தினார். தொடர்ந்து, விவசாயிகளை தொழில்
முனைவோராக்கும் அரிய முயற்சியாக, எளிய அடித்தட்டு மக்கள் தங்களது தொழில் முனைப்புகளை
கூட்டாக மேற்கொண்டு, தங்களை மேம்படுத்தி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கித் தர
ஊக்குவிக்கும் மாம் (மார்த்தாண்டம் வாய்ப்பு உருவாக்குநர்கள்) என்ற நிறுவனத்தை விழாமேடையில் மேதகு
ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் துவங்கி வைத்தார். மாம் நிறுவனத்தின் செயல்பாடுகள், முக்கியத்துவம் தற்போது
இந்த நிறுவனத்தின் வழியாக செயல்படுத்தப்படும் தேன் உற்பத்தி மற்றும் அதன் பயன்கள் குறித்து
பேரருட்தந்தை பிராங்கிளின் விளக்கி கூறினார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றி பெற்ற கிளஸ்டர் பொறுப்பாளர்கள், மற்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் சுயஉதவிகுழு
பொறுப்பாளர்களுக்கும் மேதகு ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் பரிசுகள் வழங்கினார். விழாவின் இடையே சுய உதவி
குழு பொறுப்பாளர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த விழாவில் மிட்ஸ் மண்டல இயக்குநர்கள்,
அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் 450 -க்கும் மேற்பட்ட சுய உதவி குழு பொறுப்பாளர்கள
கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மிட்ஸ் சுய உதவி குழுக்களின் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா
