கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் இன்று (20.ம் தேதி) கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள அறைக்கு சீல் வைக்கப்படுவதையும் பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உட்பட பலர் உள்ளனர்.