மீண்டும் 6 பி அரசு பஸ் இயக்கம்

Share others

திங்கள்சந்தை நாகர்கோவில் தடம் எண் 6 பி அரசு பஸ் சமீப காலமாக இயக்கபடாமல் இருந்து வந்தது. இந்த அரசு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் சித்தன்தோப்பு தூய அலங்கார அன்னை ஆலயம் முன் பகுதியில் இருந்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து 6 பி பஸ்சை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வன், பொருளாளர் லூக்காஸ், சடையமங்கலம் ஊராட்சி தலைவர் அருள் ராஜ், சமூக சேவகர் சூசைமரியான் மற்றும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மகளிர் விடியல் பயணம் என்று நீலக் கவரில் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களிலும் மகளிர்கள் கட்டணம் இல்லாத பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *