மீனவர்களை மீட்க கேட்டு மனு

Share others

ஆழ்கடலில் விசை படகின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், மாலதீவில் சிக்கியுள்ள 12 இந்திய மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை கோரிக்கை

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி சர்ச்சில் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் இழுவை கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட 12 இந்திய மீனவர்களை மாலத்தீவில் இருந்து மீட்டு வரவும், விபத்து ஏற்படுத்தி மீனவர் விசைப்படகை மூழ்கடித்த இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளித்துறை அமைச்சர், மத்திய மீன்வளத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் அவர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் வழியாக மனு அளித்தனர். மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் அல்போன்ஸ் மகன் பைஜு என்பவருக்கு சொந்தமான சென்ட் ஆன்டனிஸ் ( IND/TN/15/MM/9119) என்ற விசைப்படகில் இரவிப்புத்ந்தரையை சார்ந்த கிளிமாசு மகன் ஷெரின் ஆன்ட்றோ (48) , டென்ஸ்டன் மகன் ஷெல்டன்(27), தொபியாஸ் மகன் சூசை ரிஜிஸ்ட்டன் (35), ததேயுஸ் மகன் தேஜாஸ் (26), ஜெர்மனியாஸ் மகன் சூசன் (34), தூத்துரை சார்ந்த அனிமாஸ் மகன் ஜோஸ் (33), பூத்துறையை சார்ந்த சபரியார் அடிமை மகன் சுரேஷ் (33) மற்றும் கேரளா மாநிலம், விழிஞ்சம் பகுதியை சார்ந்த சிமியோன் மகன் ஆண்டனி ராஜு(34), பாண்டிச்சேரி கடலூறை சார்ந்த ராஜு மகன் ஆனந்த் (28), மாரியப்பன் மகன் ரமேஷ் (35) அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிஷு கர்மா மகன் பிமல் பிசு (25), கிரன் பீன் மகன் அபிஜித் (29) ஆகிய12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி (7.8.2023) அன்று தேங்காய் பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்கள். இம்மீனவர்கள் ஆழ் கடலில் சுமார் ஒரு மாதம் மீன் பிடித்து விட்டு கரை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்ற நேரத்திலே ஆழ்கடலில் 04.32 N, 75.57 E என்ற பகுதியில் வைத்து மீனவர்களது சென்ட் ஆண்டிநிஸ் விசைப்படகின் மீது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இழுவை கப்பலானது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் மீனவர்களது விசை படகு முழுவதும் கடலுக்குள் மூழ்கியது. விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பலானது காயபட்ட மீனவர்களை உடனடியாக தங்களது இழுவை கப்பலில் காப்பாற்றியது. அக்கப்பல் இந்திய மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டு வராமல் இழுவை கப்பல் தாங்கள் செல்லவேண்டிய மாலத்தீவுக்கு கொண்டு செண்டு உள்ளது. மீனவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க பெற்று, மாலத்தீவில் உள்ள டிட்டண்சன் மையத்தில் வைத்துள்ளனர். மீனவர்களின் விசைப்படகானது முழுவதும் ஆக கடலுக்குள் மூழ்கி இருக்கின்றது. படகில் இருந்த வலைகள், தூண்டில் மட்டுகள், எக்கோ சவுண்ட்டர், ஜி .பி. எஸ், ஏ.அய். எஸ், வயர்லெஸ் போன்ற கருவிகளும் மீன் பிடிக்க பயன்படுத்துகின்ற பிற கருவிகளும் மீனவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக பிடித்த 20 லட்சம் மதிப்புள்ள படகிலிருந்து மீன்களும் படகுடன் கடலில் மூழ்கடித்து பெரும் இழப்பை ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மாலத்தீவு அதிகாரிகள் இந்திய மீனவர்களை விசாரணை கைதிகளாக மாலத்தீவு டீட்டென்ஷன் சென்டரில் வைத்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட ஏழை இந்திய மீனவர்களை விசாரணை கைதிகளாக மாலத்தீவு அதிகாரிகள் சிறை வைத்துள்ளது கண்டனத்திற்குரியதாகும் என பணியாளர் சர்ச்சில் கூறியுள்ளார். அவர் இந்திய வெளித்துறை அமைச்சர் ஜெயசங்கர், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ருபாலா, மற்றும் தமிழக முதல்வர் . ஸ்டாலின் ஆகியோருக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வழியாக அளித்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ள கோரிக்கைகள்:

1). விசாரணை கைதிகளாக உள்ள 12 இந்திய மீனவர்களை உடனடியாக இந்தியாவுக்கு மீட்டு வர வேண்டும்.
2). விபத்து ஏற்படுத்திய இழுவை கப்பல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு பெரும் பொருள் இழப்பையும் வருமான இழப்பையும் ஏற்படுத்திய இழுவைக் கப்பலிடமிருந்து உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத்தர வேண்டும்.
3). தொடர்ந்து ஆழ்கடளிலே மீனவர்களுக்கு இதுபோன்று கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் கப்பலை செலுத்தி மீனவர்களின் உயிரை துட்சமென எண்ணி விபத்து ஏற்படுத்தி செல்கின்ற கப்பல்கள் மீது முறையான நடவடிக்கை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
4). குறிப்பாக இந்திய கப்பல் துறை கழகம் இதுபோன்ற விபத்துக்கள் ஆழ்கடலில் நடக்கின்ற பொழுது உடனடியாக விபத்து ஏற்படுத்திய கப்பலை கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
5). ஆழ்கடலிலே விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை பொருள் இழப்பையும் உருவாக்குகின்ற கப்பல் மாலுமிகளை கைது செய்து, அவர்களது கப்பல் செலுத்தும் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
6). பொருள் இழப்பும் உயிரிழப்பும் ஏற்படுகின்ற மீனவர்களுக்கு சர்வதேச அளவில் நிவாரணம் பாதிப்பு ஏற்படுத்திய கப்பல் உரிமையாளரிடம் இருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும்.
7) மீனவர் படகுமீது மோதி விபத்தை ஏற்படுத்தி, மீனவர்களை அவரது சொந்த நாடான இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்க்காமல் மாலத்தீவுக்கு சென்று கரையில் விட்ட அந்த விபத்து ஏற்படுத்திய இழுவை உடனே ஆய்வு செய்து கப்பல் மீது தக்க நடவடிக்கை எடுத்து மீனவர்களுக்கு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்.

பணி. சர்ச்சில்,
9443017295


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *