
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில்
சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி அளித்தல்
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில்
சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக அகில இந்திய குடிமைப்பணி
பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டுதோறும் 20
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆயத்த
பயிற்சி அளிக்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடல் மற்றும்
உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு
பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு
சங்கம் மற்றும் மீனவர் நலவாரியத்தில்
நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின்
வாரிசுதாரர்கள் 1.8.2023 ல் உள்ளபடி வயது 21 முதல் 32 வரையிலும் மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 35 வரையிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 37
வரையிலும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் 42 வரையிலும் வயது வரம்பு கொண்ட
பன்னிரெண்டாம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்று முடித்துள்ள
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் படிப்பு முடித்து வேறு பணிகளில்
பணிபுரிந்து வரும் தகுதியுடைய மீனவ சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள்
குடிமைப்பணிகளில் சேருவதற்கான ஆயத்த பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக
www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு
வழிகாட்டு நெறிமுறைகளைப் பதிவிறக்கம் செய்து அல்லது மண்டல மீன்வளம் மற்றும்
மீனவர் நலத்துறை துணை இயக்குநர் / நாகர்கோவில (இ) குளச்சல், குளச்சல்
(இ) தேங்காப்பட்டணம் மற்றும் கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி
இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப் படிவத்தினை
விலையின்றி பெற்று, வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை 18.11.2023-க்குள் தங்களது பகுதியிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர்
நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல்
மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மண்டல மீன்வளம்
மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.