முக்கலம்பாடு புனித பவுலா மொந்தால் சிபிஎஸ்இ பள்ளியில் நாவம்பர் மாதம் 12 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொள்ளும் புத்தக கண்காட்சி நடக்க உள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம். வாசிப்போம் நேசிப்போம் என்ற சிந்தனையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் அனைவரும் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி செல்ல அன்போடு அழைக்கிறார்கள்.