தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24.2.2026 கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நினைவு வளைவு மற்றும் நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள குமரி கோமேதகம் ஆர்.பொன்னப்பாநாடர் திருவுருச்சிலை திறந்து வைத்தல் மற்றும் 25.2.2026 அன்று வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா நாகர்கோவில் கான்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக, 24.2.2026 மற்றும் 25.2.2026 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.
எனவே, 24.2.2026 மற்றும் 25.2.2026 ஆகிய நாட்களில் தடையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
