முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா

Share others

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைகழக பொறியியல்
கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்
துவங்குவதை தொடர்ந்து நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், கலந்து கொண்டு பேசுகையில் –
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில்
முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் துவங்க உள்ளது. நமது கன்னியாகுமரி
மாவட்டத்தில் நாகர்கோவில் கோணம் அரசு பல்கலைகழக பொறியியல் கல்லூரி சிறந்த
முறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு தேவையான அனைத்து
அடிப்படை உபகரணங்களும், கட்டமைப்பு வசதிகளும் மாணவ, மாணவர்கள் சிறந்த
முறையில் கல்வி கற்பதற்கான சூழல் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவ,
மாணவியர்களுக்கு பயிற்றுவிக்கும் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களை கல்லூரி
முதல்வர் அவர்கள் திறன்பட வழிநடத்தி வருகிறார். இன்று முதலாம் ஆண்டு பயில
வந்திருக்கும் இளநிலை பொறியியல் மாணவ, மாணவியர்கள் மற்றும் மாணவர்களுடன்
வருகை தந்துள்ள பெற்றோர்களை மனமார வரவேற்கிறேன். மாணவர்களாகிய நீங்கள்
படிக்கும்போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை துறை ஆசிரியர்கள்,
பேராசிரியர்கள் மற்றும் மூத்த மாணவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
அவர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி முதலாம் ஆண்டு பயில உள்ள உங்களுக்கு
தற்போது அடிப்படை பாடங்கள் இருக்கும். இரண்டாம் ஆண்டும் முதல் துறை சார்ந்த
பாடங்கள் நடத்தப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்களில் முழுகவனம் செலுத்தி
வாழ்வில் உயர்நிலையை எய்திட வேண்டும். குறிப்பாக பேரிடர் காலங்களில் ஏற்படும்
காலநிலை மாற்றங்களை முன்னறிவிக்கும் விதமான கருவிகள், சாலை பாதுகாப்பிற்கு
தேவையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கிடவும், மீனவர்கள்
கடலுக்கு சென்றபின் ஏற்படும் காலநிலை மாற்ற தகவல்களை அவர்களுக்கு தெரிவிக்கும்
வகையிலான உபகரணங்கள் உள்ளிட்ட உபயோகமான கருவிகளை உருவாக்கிட
முன்வரவேண்டும்.


மேலும் இறுதியாண்டு படிக்கும்போதே மத்திய, மாநில அரசு பணிகளுக்கான
தேர்வுகள், பொது நிறுவனங்கள், மாவட்ட, மாநில, தேசிய மற்றும் உலக நாடுகளில்
பணிபுரிவதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான
அடிப்படை ஆங்கில மொழி மற்றும் பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கு முன்வர
வேண்டும். மேலும் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று
தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களது தனித்திறமைகளை
வளர்த்துக்கொள்வதோடு, தங்களுக்குள்ளே ஒரு குழுவினை உருவாக்கி அனைவரும்
மாணவர்கள் சுயமாக இயந்திரங்கள்,
இணைந்து செயல்படவேண்டும்
தயார்செய்து சந்தைபடுத்தி தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என
வாழ்த்துகிறேன்.
மேலும் இன்று வருகை தந்துள்ள மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் சாலை
விதிகளை மதித்து இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது கண்டிப்பாக
தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
அத்தோடு நமது மாவட்டத்தை குப்பையில்லா குமரி மாவட்டமாக மாற்றிட முன்வர வேண்டும்.
தேவைப்படும் மாணவ, மாணவியர்களுக்கு வங்கி கடன் வழங்க முன்னோடி வங்கி
மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் படிக்கும் நேரங்களை தவறான வழிகளில்
செலவிடாமலும், அனைவரும் பட்டதாரி ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு
சமூகத்திற்கு உபயோகமான கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி வாழ்வில் முன்னேற்றம் பெற
முயற்சிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர்
.ஸ்ரீதர், பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு பல்கலைகழக பொறியியல் கல்லூரி முதல்வர்
நாகராஜன், துறை தலைவர்கள் டைட்டஸ், ம
டி.வி.எஸ்.பிள்ளை, பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள்,
உட்பட பலர் கலந்து கொண்டார்கள்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *