கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் தனியார் பெயரில் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தூத்துக்குடியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் சுகிர்தா(27) என்பவர் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் சம்பவத்தன்று வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இருந்துள்ளார். அவர் கல்லூரிக்கு செல்லாதது குறித்து தகவல் அறிந்த சக மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து ஹாஸ்டலில் சென்று பார்த்தபோது சுகிர்தா உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இநு குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுகிர்தா உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.