தமிழகத்தின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற பெருமைக்கு சொந்தக்காரரான முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதன் இன்று( 8 ம் தேதி) காலை காலமானார்கள். அவர்களது இறுதிச்சடங்கு நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இவர் 1996 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலக்கருப்புகோடு ஆகும். இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் முடிந்து உள்ளது. முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் மக்கள் பணி செய்வதை தொடர்ந்து செய்து வந்தார்.