உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு முளகுமூடு வட்டார இளைஞர் இயக்க தலைவர் செல்வன். ஆல்பர்ட் தலைமையில், இயக்குநர் அருட்பணி அஜின் ஜோஸ் முன்னிலையில் முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் முளகுமூடு பசிலிக்காவில் இருந்து வெள்ளிக்கோடு ஆலயம் வரை மாபெரும் பேரணி நடத்தினர். இந்த பேரணியை தொடர்ந்து அவளின் குரல் மாற்றத்தின் விடியல் என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடந்தது. பொதுக்கூட்டத்தில் குழித்துறை மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. மார்டின், குழித்துறை மறைமாவட்ட இளைஞர் இயக்க இயக்குநர் அருட்பணி.ஆல்பின் ஜோஸ், வெள்ளிக்கோடு பங்குத்தந்தை அருட்பணி அலோசியஸ், முளகுமூடு வட்டார இளைஞர் இயக்குநர் அருட்பணி. அஜின் ஜோஸ் ஆகியோர் உரை ஆற்றினார்கள். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சினேகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தின் போது நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பெண்கள் , இளைஞர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முளகுமூடு வட்டார இளைஞர் இயக்கம் பேரணி
