குருந்தன்கோடு – பேயன்குழி
சாலையை செப்பனிடாததை கண்டித்து
மூன்றாம் கட்ட போராட்டம் காரங்காட்டில் இருந்து துவங்கி குருந்தன்கோடு
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா. கம்யூ., கட்சி
தலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு
மா. கம்யூ. குருந்தன்கோடு வட்டாரக்குழு உறுப்பினர்கள் சேது
தலைமை தாங்கினார். ராஜூ துவக்கி வைத்து பேசினார், விஜயக்குமார் மற்றும்
திமுக சார்பில் அருள்பிரகாஷ் கிறாஸ் அல்காண்டர், காங்கிரஸ் கட்சியின் சார்பாக
பெலிக்ஸ்ராஜன், ராஜா, ஈஸ்வரன் ஆகியோர்கள் கோரிக்கையை விளக்கி
பேசினார்கள். கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் தோழர்
ஆலிவர்பிரைட் வட்டார குழு செயலாளர் ஜெயன்றுதாஸ், மாவட்ட செயற்குழு
உஷாபாசி, மாவட்ட செயலாளர் செல்லச்சாமி ஆகியோர் சிறப்புரை நிகழ்தினார்கள்,.
மரியபவுல், பேரின்பாநாயகம், ஆறுமுகம், செல்வன். மரியபாலன்,
தங்கசாமி, ஜார்ஜ், அருள் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.