போக்குவரத்தில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்,ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணபலன்களை உடனடி வழங்க வேண்டும்,அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்,ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும்,2003க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,வாரிசு வேலைக்கு காத்திருப்போருக்கு பணி வழங்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 9.1.2023 அன்று முதல் நடைபெற உள்ள வேலைநிறுத்த விளக்க வாயிற் கூட்டம் ராணித்தோட்டம் மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்றது.போக்குவரத்து சிஐடியு பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் .லெட்சுமணன்,சுந்தர்ராஜ்,
பொன்.சோபனராஜ்,(ஓய்வுபெற்றோர் நல அமைப்பு)
தங்கமோகன்,டென்னிஸ் ஆன்டனி(சிஐடியு),அய்யாத்துரை,விஜயகுமார்,(மீட்பு குழு)சண்முகம்(டிடிஎஸ்எப்)ஆதித்தன் (ஓய்வூதியர் சங்கம்) சிவகுமார்(எம்எல்எப்)பேசினர்.
சின்னன்பிள்ளை,
மரியவின்சென்ட்,கிருஷ்ணதாஸ், முருகன்(ரேவா)ஜான்ராஜன், செர்க்கான்,ஜெயகுமார்,தாமஸ்,சங்கர நாராயணன்,ஸ்டான்லிராபர்ட்,அஜி, லியோ,பரமசிவன்,மனோஜ் உட்பட பலர் பங்கெடுத்தனர்.