வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலைமாட சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழாவில் 1008 திருவிளக்கு பூஜை

Share others

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவ சுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா டிசம்பர் மாதம் 18ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி காலை வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளான 18 ம் தேதி காலை மங்கள இசை, மஹா கணபதி ஹோமம், 5.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு லட்சார்ச்சனை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாம மாத்ரு சக்தி பூஜை, இரவு 7 மணிக்கு தீபாராதனை, 7.30 மணிக்கு பஜனை, 8 மணிக்கு 10 மற்றும் 12 ம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், 8.30 மணிக்கு பண்பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குதலும் நடந்தது. 2 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு தீபாராதனை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 2 மணிக்கு இராகு கால துர்கா பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு பஜனை, 7.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 3 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு குலைவாழை அலங்கரித்தல், 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாத ஊரார் திருவாசக சபை நடத்தும் திருவாசக முற்றோதல், 6 மணிக்கு தீபாராதனை, 6.30 மணிக்கு பஜனை நடந்தது.இரவு 7 மணிக்கு நடந்த 1008 திருவிளக்கு பூஜை முதல் திருவிளக்கை சுங்காங்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் குமாரி கிருஷ்ணவேணி ஏற்றி வைத்தார். விவேகானந்தா கேந்திரம் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் லீலா திருவிளக்கு பூஜையை நடத்தினார். 9 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டிமன்றமும் நடந்தது. 4 ம் நாள் காலையில் தீபாராதனை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 2 மணிக்கு இரணியல் அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து சிங்காரி மேளத்துடன் யானை மீது பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம், மாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு பஜனை, 9 மணிக்கு வில்லிசை, 12 மணிக்கு நாகர் ஊட்டு தீபாராதனையும் நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் காலையில் தீபாராதனை, 7 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு வடக்கு பேயன்குழி சத்திரபதி வீர சிவாஜி இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் அம்மனுக்கு 108 பானைகளில் மாபெரும் பொங்கல் வழிபாடு நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல், 12.30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 5 மணிக்கு பக்தி பாடல், 6 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு பஜனை, 9 மணிக்கு மகுட கச்சேரி, 12.30 மணிக்கு சிவசுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. விழாவின் 6 ம் நாளான 23 ம் தேதி காலையில் தீபாராதனை, 6.30 மணிக்கு காலன் சுவாமி மஞ்சள் நீராடுதல், 7 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 9 மணிக்கு மகுட கச்சேரி, 10 மணிக்கு வாதை சுவாமி மஞ்சள் நீராடுதல், மதியம் 1 மணிக்கு சிவசுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 1.30 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு பஜனை, 7.30 மணிக்கு சிங்காரி மேளம், 11 மணிக்கு சிங்காரி மேளம், ராஜ மேளத்துடன் ராமர் சுவாமி மற்றும் அம்மன் சுவாமி வீதி உலா வருதல் மறுநாள் காலை 6 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் ஊர் தலைவர் சந்திரன், துணைத் தலைவர் சகாதேவன், இணை தலைவர் பால கிருஷ்ணன், செயலாளர் இராமதாஸ், துணை செயலாளர் முத்து கிருஷ்ணன், இணை செயலாளர் பிச்சை லிங்கம், பொருளாளர் ராஜன், துணை பொருளாளர் ஜெபசிங், இணை பொருளாளர் ரெத்தின மணி, காரிய தரிசிகள் பச்சைமால், திருமால், சந்திரன், பால் பாண்டியன், ஹரி ஹர பிரபு, ராகுல், ஸ்ரீஜித் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *