வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா 17 ம் தேதி முதல் 22 ம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. விழாவில் 17 ம் தேதி காலையில் மகா கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, 9 மணிக்கு லட்சார்ச்சனை, மதியம் தீபாராதனை, 2 மணிக்கு ராகுகால துர்கா பூஜை, மாலையில் பஜனை, இரவில் தீபாராதனை, பஜனை, 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு மற்றும் சமய வகுப்பு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், 10 மணிக்கு 10 மற்றும் 12 ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நடக்கிறது. 18 ம் தேதி காலையில் தீபாராதனை, குலை வாழை அலங்கரித்தல், திருவாசக முற்றோதல், மாலையில் தீபாராதனை, சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பஜனை , இரவு 7 மணிக்கு மாபெரும் 1008 திருவிளக்கு பூஜை, திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசுகளை வடக்கு பேயன்குழி ஊர் தலைவர் சந்திரன் வழங்குகிறார். 9 மணிக்கு உதயகீதம் இன்னிசை கச்சேரி நடக்கிறது. 19 ம் தேதி காலையில் தீபாராதனை, ஸ்ரீ லலிதா ஹைஸ்ர நாம மாத்ரு சக்தி பூஜை, மதியம் தீபாராதனை, 2 மணிக்கு இரணியல் அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து ராஜ மேளத்துடன் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, அன்ன பிரசாதம் வழங்குதல், 8 மணிக்கு பஜனை,9 மணிக்கு வில்லிசை , 11:30 மணிக்கு நாகர் ஊட்டு தீபாரதனை நடக்கிறது. 20 ம் தேதி காலையில் தீபாராதனை, சிற்றுண்டி அன்னதானம், வில்லிசை, 11 மணிக்கு வடக்கு பேயன்குழி சத்திரபதி வீர சிவாஜி இளைஞர் நற்பணி மன்ற நடத்தும் 15 ஆம் ஆண்டு அம்மனுக்கு 108 பானைகளில் மாபெரும் பொங்கல் வழிபாடு, மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல், 2 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 8 மணிக்கு பஜனை, தப்பு மேளம், 9 மணிக்கு மகுட கச்சேரி, 12 மணிக்கு சிவ சுடலை மாட சுவாமிக்கு சைவப் படையல் படைத்தல், 1 மணிக்கு சிவ சுடலை மாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 2:30 மணிக்கு படையல் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 21 ம் தேதி காலையில் காலம் சுவாமி மஞ்சள் நீராடுதல், தீபாராதனை, சிற்றுண்டி அன்னதானம், மகுட கச்சேரி, 10 மணிக்கு வாதை சுவாமி மஞ்சள் நீராடுதல், மதியம் ஒரு மணிக்கு சிவ சுடலை மாடசுவாமிக்கு அலங்கார தீபாரதனை, 2:30 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலையில் தீபாராதனை, இரவு 7 மணிக்கு பஜனை, நையாண்டி மேளம், 8 மணிக்கு சிங்காரி மேளம் 11:30 மணிக்கு ஸ்ரீராமர் அலங்கார தீபாரதனை, 12 மணிக்கு சிங்காரி மேளம், ராஜ மேளத்துடன் ஸ்ரீ ராமர் சுவாமி மற்றும் அம்மன் வீதி உலா வருதல், 22 ம் தேதி காலை 5:30 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் சந்திரன் தலைமையில் ஊர் நிர்வாகிகள், வடக்கு பேயன்குழி ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.