வடக்கு பேயன்குழி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் சிவசுடலை மாடசுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமர் கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா 17 ம் தேதி முதல் 22 ம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. 19 ம் தேதி நடந்த விழாவில் மதியம் இரணியல் அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரர் சிவன் கோயிலில் இருந்து ராஜ மேளத்துடன் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.