சென்னை கலைவாணர் அரங்கத்தில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், நடைபெற்ற சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் , வேலூர் மற்றும் கடலூர் கோட்டங்களை சார்ந்த வணிகர்களுக்கான சமாதானத் திட்டம் – 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்க நிகழ்ச்சியில், வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடிக்கான ஆணைகளை வழங்கினார். நிகழ்வின் போது வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.