வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு
துறைகள் சார்பில்
வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில்
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை,
பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி,
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை,
பள்ளிக்கல்வித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, குடிநீர் வடிகால் வாரியத்துற,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, ஆவின், தாட்கோ,
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உட்பட பல்வேறு துறைகள்
சார்பில், நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த
பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள்
உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்குடன் ஆய்வு
மேற்கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தற்போது
மழைக்காலம் என்பதால் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி
தன்மையினை பொதுப்பணித்துறை, வருவாய் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு
மேற்கொண்டு பழுதடைந்த கட்டிடங்களை சீரமைத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் உள்ள
கட்டிடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்களில்
மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க துறை சார்ந்த
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு
துறைகளின் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட
வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கெளசிக்,
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்
சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராஜட் பீட்டன், , கூடுதல்
துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(பொது) சங்கரநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி,
செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) ஜோதிபாசு, தோட்டக்லைத்துறை துணை இயக்குநர்
ஷீலா ஜாண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா,
மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உட்பட அனைத்துத்துறை
சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *