சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம்; இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்
தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில்,மாவட்ட வருவாய் அலுவலர் .மோகனச்சந்திரன் வழங்கி தெரிவிக்கையில்;,
.
தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர்களின் நலனுக்காகவும், அவர்களின் திறன் மேம்பாட்டிற்கெனவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு, அரசால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு முகாமினை மாநிலம் முழுவதும் நடத்திட, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு, இம்மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள், தங்களின் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும், மாவட்டத்தில் மூன்றாவது தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா மானாமதுரை பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது.
பயிற்சியுடன் வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்பதற்காக, பயிற்சி அளிக்கப்படும் நிறுவனங்கள் மூலமாகவே, வேலைவாய்ப்புகள் பெற்றிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கு பயனுள்ள வகையில் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
சிறப்பாக நடைபெறும் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 86 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்தனர். இம்முகாமிற்கு மாவட்டம் முழுவதும் இருந்து 1,273 வேலைநாடுநர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்;. இதில் 362 வேலை நாடுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்;டுள்ளது. இதுதவிர 85 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற அரசு துறைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக மனுதாரர்களுக்கு சுயதொழில் வழங்குவதற்கான விண்ணப்பங்களும் இம்முகாமில் வழங்கப்பட்டுள்ளது. வேலைநாடும் இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பங்களும் வழங்கப்பட்டது. திறன் பயிற்சி நிறுவனங்களின் சார்பாக 36 நபர்கள் திறன் பயிற்சிக்கெனவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் பங்கு பெற்று தங்களின் கல்வித்தகுதிக்கேற்றால் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற வேண்டும். தாங்கள் பயன்பெறுவது மட்டுமன்றி, தங்களைச் சார்ந்தவர்களுக்கும் எடுத்துரைத்து, பயன்பெறச் செய்ய வேண்டும். இம்முகாமின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற அனைத்து இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, மானாமதுரை நகர்மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணிகணேஷ், இராஜலெட்சுமி, மானாமதுரை வட்டாட்சியர் ராஜா, ஒக்கூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.