கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. 39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆறு சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்படும். மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை தனி வைப்பறையில் வைக்கப்படும். அதற்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கோணம் பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் 229 கன்னியாகுமரி மற்றும்230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், முதல் தளத்தில் 231 குளச்சல் மற்றும் 232 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், இரண்டாம் தளத்தில் 233 விளவங்கோடு மற்றும் 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும், 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட உள்ளது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
ஆய்வுகளில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, செயற்பொறியாளர் பொதுபணித்துறை (கட்டடம்) வெள்ளைசாமி, வட்டாட்சியர்கள் அனில் குமார் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), தனி வட்டாட்சியர் சுப்பிரமணியம், கோணம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் நாகராஜன், உதவி செயற்பொறியாளர் பொதுபணித்துறை (கட்டடம்) அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.