வரும் 30.8.2025 (சனி) மற்றும் 31.8.2025 (ஞாயிறு) ஆகிய நாட்களில் விநாயகர்
சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் இருந்து ஆரம்பித்து நாகர்கோவில்
மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, வடசேரி,
மணிமேடை சந்திப்பு, மணியடிச்சான் கோயில், வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பேருந்து
நிலையம், கோட்டார், செட்டிகுளம் சந்திப்பு, சவேரியார் சந்திப்பு, கம்பளம், பீச் ரோடு
சந்திப்பு. ஈத்தாமொழி பிரிவு வழியாக சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரைக்கு
செல்வதால் இரு தினங்களிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை கீழ்க்கண்டவாறு
போக்குவரத்து மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே வெளியூர் செல்பவர்கள்,
ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு
செல்பவர்கள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து திட்டமிட்டுக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து துவங்கிய பின்பு
ஊர்வலத்தின் பாதையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. பார்வதிபுரம்,
வெட்டூர்ணிமடம், டபிளியூசிசி, கிருஷ்ணன்கோவில், வடசேரி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில்
இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் வடசேரி, புத்தேரி ரோடு, அப்டா
மார்க்கெட் வழியாக நான்கு வழிச்சாலையில் செல்ல வேண்டும்.
கோட்டார், செட்டிகுளம், ராமன்புதூர், பால்பண்ணை, பார்வதிபுரம், வடசேரி மற்றும்
அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், கூடங்குளம் செல்லும்
வாகனங்கள் டெரிக் ஜங்சன், அனந்தன் பாலம் சானல்கரை, கோணம் ஆத்துப்பாலம்
சானல்கரை, தொல்லவிளை சானல்கரை, வல்லன் குமாரவிளை சானல்கரை, வேதநகர்,
பறக்கை செல்ல வேண்டும் அல்லது ராமன்புதூர், ஏஆர் கேம்ப் ரோடு, பட்டகசாலியன்விளை,
இருளப்பபுரம், பறக்கை ரோடு சந்திப்பு, நாயுடு மருத்துவமனை வழியாக செல்ல வேண்டும்.
நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா வாகனங்கள் மற்றும்
பிற வாகனங்கள், வடசேரி, புத்தேரி ரோடு, அப்டா மார்கெட் சந்திப்பு, தேரேக்கால் புதூர்,
புதுக்கிராமம், தேரூர், சுசீந்திரம், மகாதானபுரம் வழியாகவும் கன்னியாகுமரி சென்றடையலாம்.
கோட்டார் ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் டெரிக் ஜங்சன்,
அனந்தன்பாலம் சானல்கரை, கோணம் ஆத்துப்பாலம் சானல்கரை, தொல்லவிளை சானல்கரை, வல்லன் குமாரவிளை சானல்கரை, இளங்கடை, பறக்கை ரோடு சந்திப்பு, நாயுடு
மருத்துவமனை, ரயில்வே ரோடு வழியாக ரயில் நிலையம் செல்ல வேண்டும்.
அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ராஜாக்கமங்கலம், குளச்சல்,
ஆசாரிப்பள்ளம், பார்வதிபுரம், திங்கள் நகர், தக்கலை, மார்த்தாண்டம் மார்க்கமாக செல்லும்
அனைத்து அரசு பேருந்துகளும் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
மேலும் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம்,
கூடங்குளம், தெங்கம்புதூர், மணக்குடி மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகள் கோட்டார்
ரயில் நிலைய வாயிலில் தற்காலிகமாக செயல்படும் பேருந்து நிலையத்தில் இருந்து
இயக்கப்படும்.
குறிப்பு: மேற்படி வழித்தட மாற்றமானது இரு தினங்களிலும் (30.8.2025 மற்றும் 31.8.2025)
மாலை 3 மணி முதல் 6 மணி வரை அல்லது சிலை கரைப்பு ஊர்வலமானது நாகர்கோவில்
மாநகரை கடந்து செல்லும் வரை அமல்படுத்தப்படும். மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு,
பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்
