விளவங்கோடு தொகுதியில் சாலை பணி

Share others

ரூபாய் 78.00 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி கோட்டகம் – ஈச்சி விளை சாலையில் அலங்கார தரைஓடு அமைக்கும் பணியினை தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி இணைந்து தொடங்கி வைத்தார் . இந்த சாலையானது சீரமைத்து அலங்கார தரையோடு அமைக்கப்படும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இச்சாலையை பயன்படுத்தி‌ இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வார்கள் . நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் இந்த சாலை பயன்பாடாக இருக்கும் . எனவே இந்த சாலையை விரைவாக பணியை முடிக்க வேண்டும் என்று உண்ணாமலை கடை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பொறியாளர்களை விஜய தரணி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமீலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் காங்கிரஸ் திமுக கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாலை தொடக்க விழாவினை சிறப்பித்தனர்


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *