விருதுநகர் மாவட்டம் தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் மாணவர் மாநாடு பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ம் தேதிகளில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் வைத்து நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் திருக்குறள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கன்னியாகுமரி முதல் சென்னை வரை விருதுநகர் மாவட்ட ஆசிரியர்களால் விழிப்புணர்வு மிதிவண்டி பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த விழிப்புணர்வு மிதிவண்டி பயணத்தை கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.