ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 56,00,000 மோசடி செய்த கணவன் மனைவியை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஐரேனிபுரம் கோணத்துவிளை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூபாய் 56,00,000 பணத்தை பெங்களூரை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியிடம் கொடுத்து ஏமார்ந்ததாக புகார் மனு ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் மனு மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் உமா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 56,00,000 வாங்கிக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததும், பணத்தை திருப்பி கேட்ட போது தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த கணவன் மனைவி ஜோயல் தேவா (35) மற்றும் அபிஷா(33) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.