குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம் என் மாற்றமே சமூக மாற்றம் என்ற மையச் சிந்தனையில் 20-7-2024 ( சனிக்கிழமை) அன்று குழித்துறை
மார் எப்ரேம் வளாகத்தில் வைத்து காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.
இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு. வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை வகிக்கிறார்.
பாறசாலை மறைமாவட்ட ஆயர் மேதகு. தோமஸ் மார் எவுசேபியோஸ், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்,
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மார்த்தாண்டம் மேரி மக்கள் கன்னியர் சபை மாகாணத் தலைவி மதர் றோஸ் பிரான்சிஸ், சுவாமிதோப்பு அய்யாவழி சமயத் தலைவர் குருமகா சன்னிதானம் பாலபிரஜாபதி, தக்கலைகீற்று மாற்று ஊடகம் இயக்குனர் ஹாமீம் முஸ்தபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
1999 ஜூலை 22-ம் நாள் ஹோம் சிறப்புப் பள்ளியாக
உருவெடுத்து நன்முறையில் செயல்பட்டு வருகின்றது. சிறப்புப்பள்ளியின்
சேவைப் பயணத்தின் 25 வது ஆண்டு நிறைவு விழாவின் மகிழ்வில்
எங்களோடு இணையவும், தங்கள் வருகையால் சிறப்புக் குழந்தைகளை
மகிழ்விக்கவும் அன்பாய் அழைக்கிறார்கள் ஹோம் சிறப்புப் பள்ளி இயக்குநர் / தாளாளர் அருட்தந்தை. அஜீஷ்குமார் மற்றும் தலைமையாசிரியர் டென்னிஸ். விழாவுக்கான ஏற்பாடுகளை ஹோம் சிறப்புப் பள்ளி இயக்குநர்/ தாளாளர் அருட்தந்தை அஜீஷ்குமார் தலைமையில் தலைமையாசிரியர் டென்னிஸ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.