பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 13.12.2025 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் செய்தல், பிஹெச்ஹெச் அட்டையில் பெண் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். மேற்படி மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக்கொள்கிறார்.
13 ம் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
