கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை மேற்கு தெருவில் வசித்து வருபவர் ஜான் பேட்ரிக். இவர் வில்லுக்குறி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆகும். இவர் தன்னுடைய வீட்டில் நாட்டு கோழி, கருங்கோழி, சில்க் கோழி, வாத்து போன்ற கோழி ரகங்கள் என்று சுமார் 25 க்கும் அதிகமான கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த கோழிகள் போடும் முட்டைகளை தன்னுடைய தேவைக்கு போக மீதி வரும் முட்டைகளை விற்பனை செய்வது வழக்கம். இதனால் தினமும் காலையில் எழுந்த உடன் கோழி கூட்டை மறக்காமல் ஒருமுறையாவது சென்று பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
/ இந்நிலையில் வழக்கமாக காலையில் எழுந்து கோழி கூட்டை பார்ப்பது போல் பார்த்த போது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சிறிய அளவிலான ஒரு முட்டை இருந்ததை பார்த்து உள்ளார். உடனே என்ன இது என்பதை பார்க்கும் ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் சற்று தயக்கத்துடனும் பயத்துடனும் சென்று மெதுவாக சிறிய முட்டையை எடுத்து கோழி கூட்டின் வெளியே வந்து திருப்பி திருப்பி ஆச்சரியமுடன் பார்த்தவர் அருகில் உள்ளவர்களிடமும் காட்டி உள்ளார். அருகில் உள்ளவர்களும் சிறிய முட்டையை ஆச்சரியமுடன் பார்த்து செல்கின்றனர். சிறிய முட்டையின் எடை 2 கிராம் இருப்பதாக ஜான் பேட்ரிக் தெரிவித்தார்.