21 நாட்கள் தடுப்பூசி முகாம்

Share others

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 4-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி) கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக வருகின்ற 6.11.2023 முதல் தொடர்ந்து 21 நாட்கள் வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துறை ரீதியாக வருகை புரிந்து, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசிப்பணிக்காக 55 கால்நடை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அனைத்து கிராமங்களுக்கும் சென்று, கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும். இதனை கால்நடை வளர்ப்போர் கருத்தில் கொண்டு, இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி தடுப்பூசி செலுத்தி, உங்கள் கால்நடை செல்வங்களை கோமாரி நோயிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு தங்களது பகுதிக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தகவல்கள் பெற்று, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *