கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தடிக்காரங்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிப்பள்ளம் மேலும் வல்லன்குமாரவிளை துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி நாகர்கோவில், பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம். எஸ் ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், அருமை நல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், தடிக்காரன் கோணம், அழகிய பாண்டிபுரம், தேரேகால்புதூர், கோதை கிராமம், அப்டா மார்க்கெட், திரவியம் ஆஸ்பத்திரி, சடையன்குளம், நாவல் காடு, எறும்புக்காடு, தம்மத்து கோணம் மற்றும் அனந்த நாடார் குடி மேலும் கோணம், இருளப்பபுரம், பட்டகசாலியன்விளை, கலைநகர், பொன்னப்ப நாடார் காலனி, குருசடி, பீச் ரோடு, என்.ஜி.ஓ. காலனி, குஞ்சன் விளை மற்றும் புன்னைநகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. மேலும் மின் பாதைகளில் மின்னோட்டம் இருக்காது என்று கருதி பொதுமக்கள் மின்னூட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம் என்றும் பராமரிப்பு தினத்தன்று மின பாதைக்கு இடையூறாக நிற்கும் மரக் கிளைகளை அகற்றுவதற்கு மற்றும் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணிகளுக்கும் வாரிய பணியாளர்களுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று நாகர்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.