3 மணி நேரத்தில் திருட்டு நகை மீட்பு

Share others

வீட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு, குற்றவாளியை 3 மணி
நேரத்தில் பிடித்து திருட்டு பொருள் மீட்பு…
கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட
வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த ஜெபராணி(31) என்பவரின் பூட்டியிருந்த
வீட்டை உடைத்து மர்ப நபர் ஒருவர் 40 பவுன் தங்க நகைகளை திருடி
சென்று விட்டதாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில்
புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட
குற்றவாளியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீசார் திருட்டு
சம்பவத்தில் ஈடுப்பட்ட கேரளா மாநிலம் நெடுமாங்காடு பகுதியை சேர்ந்த
ஹரி பிரசாத் என்ற வாமணாபுரம் பிரசாத்(59) என்பவரை மூன்று மணி
நேரத்தில் கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகளை
மீட்டனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த தனிப்படை
போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக
பாராட்டினார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *