கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள நெல்லியார்கோணம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 7 வருடங்களாக கோழிகள் வளர்த்து வருகிறார். தற்போது கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 30 கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்தார். இந்த கோழிகள் வளர்ந்து வந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கமாக காலையில் எழுந்து கோழிகளை பார்ப்பது போல் கோழிகளை பார்த்தபோது 30 கோழிகளும் கழுத்தில் காயப்பட்ட நிலையில் செத்து கிடந்தது. இதை பார்த்த கோபாலகிருஷ்ணனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி போனார். தான் குஞ்சு பருவத்தில் இருந்தே வளர்த்த கோழிகளை இந்த நிலையிலா பார்க்க வேண்டும் என்று அவரை அறியாமலேயே கண்களில் இருந்து கண்ணீர் மடமடவென வடிந்தது. ஒருநாள் இரவோடு இரவாக 30 கோழிகள் மர்மமான நிலையில் செத்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.