303 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஒப்படைத்தார்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் செல் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் நடவடிக்கையாக தற்போது சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான 303 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் செல் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *