சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 577 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், வேளாண்மைத்துறையின் சார்பில் மானாமதுரை, திருப்புவனம் வட்டத்திற்கு உட்பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ.10,084 மதிப்பீட்டிலான மானியத்தொகையுடன் கூடிய வேளாண் இடுபொருட்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மதகுபட்டி பைரவர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.2,00,000 மதிப்பீட்டில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கான கடனுதவியினையும் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.