7 மாதங்களில் 930 தவறவிட்ட செல்போன்கள் மீட்பு. கன்னியாகுமரி போலீஸ் அதிரடி

Share others

ஏழு மாதங்களில் மட்டும் ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சம் மதிப்பு உள்ள 930 செல்போன்கள் மீட்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டாலின் பொது மக்களிடம் ஒப்படைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.  அந்த  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார்  43,50,000 ( நாற்பத்து மூன்று லட்சத்தி ஐம்பது ஆயிரம் ரூபாய்) மதிப்பு உள்ள 290 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உரிய நபர்களிடம்  ஒப்படைத்தார்.
மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இதுவரையிலும் சுமார் 1,47,57,000  (ஒரு கோடியே நாற்பத்தி ஏழு லட்சத்து ஐம்பபத்தி ஏழாயிரம் ரூபாய்) மதிப்புள்ள 930 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகில் உள்ள  காவல்  நிலையத்தில்  உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது TamilNadu  Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) என்ற காவல் துறை             இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.  CEIR Portal  (https://www.ceir.gov.in/) என்ற இணையதளத்தில் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து தவறவிட்ட செல்போனை நீங்களே  பிளாக்
செய்திட முடியும்.
வழிப்போக்கு நபரிடமோ சரியான பில் இன்றியோ செல்போன் வாங்க வேண்டாம்  ஏனெனில் அந்த செல்போன் குற்ற சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.
பொதுமக்கள் சைபர் குற்றங்களால் பணத்தை இழந்தால் தாமதிக்காமல் உடனடியாக1930 எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்க வேண்டும், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறினார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *