கன்னியாகுமரி மாவட்டத்தில் காலையில் துவங்கிய சாரல் மழை இரவு ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கிணறுகளில் தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் சாரல் மழையில் மடமடவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் காலையில் இருந்து பெய்ய துவங்கிய சாரல் மழை இரவிலும் நீடித்த நிலையில் இருந்தது. இதனால் குளு குளு சீசன் போன்ற நிலை உருவாகியது. இந்த மழையின் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மண்பாண்ட தொழில்கள் முடங்கியது. இதனால் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் அச்சத்துடனே இருந்து வந்தனர். பகலில் சாரல் மழையாக இருந்து வந்த மழை மாலையில் இருந்து சற்று கூடுதலாக தண்ணீரை கொட்டி வருகிறது. மாலையில் துவங்கிய மழை இரவு 10.20 ஆகியும் தொடர்ந்து நீடித்த நிலையில் இருந்தது. 19 ம் தேதி பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடப்பதால் இந்த தொடர் மழையை கண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் சற்று தயக்கம் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளதாக பெற்றோர்கள் மத்தியில் பேசப்படுகிறது. காலையில் இருந்து தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பெற்றோர்கள் மத்தியில் பள்ளிகளுக்கு விடுமுறையாக இருக்குமோ என்ற பேச்சும் அடிபடுவதாக தெரிவிக்கின்றனர்.